பிளாஸ்டிக் எமன் – 2

பிளாஸ்டிக் பைகள் மூலம் விளையும் தீங்குகள் பார்போமா

  • இவை சாக்கடையில் தங்கி நீர் ஓட்டத்தை தடை பண்ணுகின்றன. இயற்கையாக நீரில் மக்காத தன்மையால் இவை நீரோட்டத்தை நிறுத்துகின்றன. மழை பெய்தால், நகரங்களில் நீர் தேக்கம் நேர இது காரணம்
  • பிளாஸ்டிக் பைகள் எல்லா இடங்களில் பறந்து குப்பையாக கிடக்கின்றன. மழை பெய்யும் போது, இவற்றில் நீர் தங்குகிறது. இவற்றில் டெங்கு சிக்கன்குனியா போன்ற நோய்களை பரப்பும் கொசுக்கள் முட்டை இட இந்த நீர் தேக்கங்கள் உதவுகின்றன
  • காவேரி போன்ற நதி நிலைகளில் இவை தங்கினால் நீரை இவை கெடுக்கின்றன.
  • தெருவில் உலவும் மாடுகள், ஆடுகள் போன்றவை பிளாஸ்டிக் பைகளை தின்று வயற்று வலி வந்து இறக்கின்றன. இவற்றை தின்று கிடைக்கும் பாலில் என்ன என்ன ரசாயனங்கள் இருக்கின்றனவோ கடவுளுக்கே வெளிச்சம்

நிலைமை எவ்வளவு மோசம் என்பதற்கு இதோ சில உண்மைகள்: இவை அமெரிக்க நாட்டிற்கு மட்டுமே:

  • ஒரு வருடத்திற்கு 380 பில்லியன் பைகள் பயன் படுகின்றன. ஒவ்வொரு அமெரிக்க குடி மகனும் ஒரு வருடத்தில் 1200 பைகள் பயன் படுத்துகிறார்
  • இவற்றில் 180 பில்லியன் ஷாப்பிங் பைகள்
  • இவற்றை உருவாக 12 மில்லியன் பாரல் ஆயில் பயன் படுத்த பட்டது
  • இந்த பைகளில் 1% சதவீதம் மட்டுமே மறு சுழற்சி செய்ய படத்டடு
  • ஒவ்வொரு வருடமும் லட்சகணக்கான பறவைகளும் கடல் மிருகங்களும் இவற்றால் மடிகின்றன
  • கடலில் ஒவ்வொரு சதுர மைலிலும் மிதக்கும் 46000 பிளாஸ்டிக் குப்பைகள் உள்ளன!

நன்றி: Envirosax இணையத்தளம்

 

Related Posts

2 கிலோ சாம்பலாகும் ஒரு டன் குப்பை!... ஒரு டன் குப்பையை பெரிய அளவில் மாசில்லாமல், வெறும் இரண்டு கிலோ சாம்பலை மட்டுமே வெ...
கொடைக்கானல் வனப் பகுதிகளில் குப்பை அகற்றும் முகாம்... கோடை விடுமுறை வந்தால் போதும். எல்லோரும் மலை பகுதி பார்த்து ஓடுகின்றோம். நம...
வீட்டிலேயே குப்பையில் இருந்து தயாரிக்கலாம் உரம்... வீட்டில் சேரும் எல்லாக் குப்பை-கழிவுகளையும் ஒரு பிளாஸ்டிக் பையில் இட்டு, குப்பைத...
பாலிதீன் எனும் பயங்கரம்!... காய்கறி கடை, பழக்கடை, மளிகை கடை, ஜவுளிக்கடை, இறைச்சிக் கடை, என எந்தக் கடையிலிருந...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *