இவர் மிஸ்டர் ரெட் பாண்டா அவர்கள். நாம் பாண்டா என்றால் கருப்பும் வெளுப்பும் உள்ள அழகான மிருகமே நினைவுக்கு வரும். அவை சீனாவில் மட்டுமே உள்ளன. அழிக்க பட்டு மிகவும் குறைவான அளவில் உள்ளன.
ஆனால் நம் இந்தியாவிலேயே அழகான பாண்டா இருப்பது பலருக்கு தெரியாது.
இவர் இமய மலையில் 8000 அடி மேல் இருக்கும் காடுகளில் வசிப்பவர். இவருக்கும் மூங்கில் இலைகள் என்றால் அதிகம் பிடிக்கும். கண்ணில் படுவது அபூர்வம். சிக்கிம், பூடான், அசாம், திபெத் போன்ற இடங்களில் இமய மலையில் ஒரு ட்ரேக் போனால் கண்ணில் படுவார்.
சிக்கிமில் உள்ள கங்டக் நகரில் உள்ள ஜூவில் இவற்றை பார்க்கலாம். ரொம்ப க்யூட் ஆனவை இவை!
ஜூவில் இவை கூத்தடிக்கும் ஒரு வீடியோ..
இவையும் அழிந்து வரும் இனங்களில் சேர்க்க பட்டுள்ளன. இவரை பற்றி மேலும் அறிய…