கங்கை எங்கே போகிறாள்?

இந்த தலைப்பில் ஜெயகாந்தன் எப்போதோ எழுதிய நாவலில் கங்கை நதி பற்றி அழகாக எழுதி இருப்பார்
எல்லோரின் பாவங்களை கழிப்பவள் தான் தூய நதியான கங்கை

இந்த கங்கை இப்போது, எப்படி இருக்கிறது பார்கலாமா? உலக சுற்று சூழல் நாளான 5th June 2012 அன்று Times of India பத்திரிகையில் வந்துள்ள விவரம் இதோ.
நல்ல நீரை மதிப்பிட இரண்டு அளவுகள் விஞானிகள் பயன் படுத்துகிறார்கள். Biological Oxygen Demand (BOD) என்பது ஒன்று. நீரில் கரைந்துள்ள ஆக்சிஜென்  அளவை குறிக்கிறது. அது குறைவாக இருந்தால் (1-2mg/ml), அந்த நீரில் மீன்கள் போன்றவை உயிர் வாழ முடியும். காசியில் கங்கையில்  இது 7mg/ml வரை இருக்கிறது

இன்னொரு அளவுகோல், நீரில் உள்ள மனித கழிவு அளவு (faecal coliform counts (FCC). நல்ல நீரில் 100 மில்லி லிட்டரில் 500 மட்டுமே இருக்க வேண்டும.

ஆனால் ஹிந்துகளின் புனித இடமான காசியில் இது 16000 வரை இருக்கிறது.

கங்கை மாசு பட காரணங்கள் – நேராக சாக்கடை வந்து நீரில் கலப்பது, மானிட கழிவுகள், மிதக்கும் இறந்த மிருகங்களின் உடல்கள்
இதில் சாக்கடை மட்டுமே 95% நீர் மாசிற்கு காரணம்.

1986 வருடம் ராஜீவ் காந்தி அவர்களால் தொடங்க பட்டு எத்தனையோ கோடி செலவு செய்து, கங்கைக்கு இந்த நிலைமை.

கங்கை எங்கே போகிறாள்?

நன்றி: டைம்ஸ் ஆப இந்தியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *