பிளாஸ்டிக் எமன் – 2

பிளாஸ்டிக் பைகள் மூலம் விளையும் தீங்குகள் பார்போமா

  • இவை சாக்கடையில் தங்கி நீர் ஓட்டத்தை தடை பண்ணுகின்றன. இயற்கையாக நீரில் மக்காத தன்மையால் இவை நீரோட்டத்தை நிறுத்துகின்றன. மழை பெய்தால், நகரங்களில் நீர் தேக்கம் நேர இது காரணம்
  • பிளாஸ்டிக் பைகள் எல்லா இடங்களில் பறந்து குப்பையாக கிடக்கின்றன. மழை பெய்யும் போது, இவற்றில் நீர் தங்குகிறது. இவற்றில் டெங்கு சிக்கன்குனியா போன்ற நோய்களை பரப்பும் கொசுக்கள் முட்டை இட இந்த நீர் தேக்கங்கள் உதவுகின்றன
  • காவேரி போன்ற நதி நிலைகளில் இவை தங்கினால் நீரை இவை கெடுக்கின்றன.
  • தெருவில் உலவும் மாடுகள், ஆடுகள் போன்றவை பிளாஸ்டிக் பைகளை தின்று வயற்று வலி வந்து இறக்கின்றன. இவற்றை தின்று கிடைக்கும் பாலில் என்ன என்ன ரசாயனங்கள் இருக்கின்றனவோ கடவுளுக்கே வெளிச்சம்

நிலைமை எவ்வளவு மோசம் என்பதற்கு இதோ சில உண்மைகள்: இவை அமெரிக்க நாட்டிற்கு மட்டுமே:

  • ஒரு வருடத்திற்கு 380 பில்லியன் பைகள் பயன் படுகின்றன. ஒவ்வொரு அமெரிக்க குடி மகனும் ஒரு வருடத்தில் 1200 பைகள் பயன் படுத்துகிறார்
  • இவற்றில் 180 பில்லியன் ஷாப்பிங் பைகள்
  • இவற்றை உருவாக 12 மில்லியன் பாரல் ஆயில் பயன் படுத்த பட்டது
  • இந்த பைகளில் 1% சதவீதம் மட்டுமே மறு சுழற்சி செய்ய படத்டடு
  • ஒவ்வொரு வருடமும் லட்சகணக்கான பறவைகளும் கடல் மிருகங்களும் இவற்றால் மடிகின்றன
  • கடலில் ஒவ்வொரு சதுர மைலிலும் மிதக்கும் 46000 பிளாஸ்டிக் குப்பைகள் உள்ளன!

நன்றி: Envirosax இணையத்தளம்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *