மரங்களை ட்ரான்ஸ்பிளான்ட் செய்து காப்பாற்றலாம்!

தய மாற்று சிகிச்சை கேள்வி பட்டிருப்போம்.. மரமாற்று சிகிச்சை தெரியுமா உங்களுக்கு? மனிதர்களை போலவே மரங்களும் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இடம் பெயர்ந்தும் வாழ முடியும். ஆம்… இதற்கு ட்ரீ ட்ரான்ஸ்பிளான்டேஷன் என்று பெயர். இதை கடந்த பத்து வருடங்களாக வெற்றிகரமாக செய்து வருகிறார், ஜெயம் லேண்ட்ஸ்கேப்  உரியமையாளரான இளங்கோ.

ஒருவர் வீடு கட்டும் இடத்தில் இருந்த பழைய வில்வ மரத்தை எப்படியாவது வெட்டாமல் காப்பாற்ற வேண்டும், அதே சமயம் மரம் இருக்கும் அதே இடத்தில் வீடும் கட்டவேண்டும் என்று கேட்டுக்கொள்ளவே அப்போது தொடங்கியதுதான் இந்த ட்ரீ ட்ரான்ஸ்பிளன்டேஷன். 

சாலைகள் அமைப்பது, வீடு கட்டுவது என பல பணிகளுக்காக மரங்கள் வெட்டப்படுகின்றன. இந்த மரமாற்று சிகிச்சை மூலம் வெட்டப்படவிருக்கும் பல மரங்களை காப்பாற்றலாம். தென்னை, ஈச்சம், மா, பலா, தூங்குமூஞ்சி, வேம்பு, எலுமிச்சை, கொய்யா மற்றும் பல வகையான மரங்களை வேறு இடத்திற்கு மாற்ற முடியும்.

அரசமரம், வில்வ மரம், நாகலிங்க மரம் போன்ற மரங்களை இப்படி இடமாற்றம் செய்யும்போது சற்று கடினமாக இருக்கும் என்று கூறும் இளங்கோ, நாடு முழுக்க இந்த மரமாற்று சிகிச்சையை செய்து கொடுக்கிறார். மரத்தின் அளவை பொருத்து சில ஆயிரங்களில் இருந்து பல ஆயிரங்கள் வரை செலவாகும்.

மரம் உள்ள இடத்தையும் புதிதாக மாற்றவிருக்கும் இடத்தையும் முதலில் ஆய்வு செய்வோம். மண்ணின் தன்மை, தண்ணீர், சூரிய ஒளி ஆகியவை கச்சிதமாக இருந்தால் மரமாற்று சிகிச்சைக்கான வேலைகளில் இறங்கிவிடுவோம். ஒரு மரத்தை, புது இடத்தில் நடப்போகும் முன் மண்ணை பதப்படுத்தி குழி தோண்டி ஒரு வாரம் வெப்பம் தணியும் வரை காத்திருப்போம். மரத்தண்டின் அளவை பொருத்து குழியின் உயரமும் அளவும் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். 

மரத்தை எடுப்பதற்கு முன்னாள், அதன் இலைகள் அனைத்தையும் முதலில் ட்ரிம் செய்து விடுவோம். வேர்களையும் ட்ரிம் செய்துவிட்டு, இயற்கை மருந்துகள் தடவப்படும். கிரேயின் மூலம் மரங்கள் தூக்கப்பட்டு பின்னர் புது இடத்தில் நடுவோம்.

மரமாற்று சிகிச்சையில் வேர்களை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். மரத்தை நடப்போகும் புது இடத்தில், வேர்களை பூச்சி அரிக்காமல் இருக்க மரம் நடப்படும் குழிகளிலும் மருந்து தெளிக்கப்பட வேண்டும். கிளைகள் பாதிக்காமல் இருக்க வைக்கோலால் சுற்றி சில நாட்கள் கண்காணிக்கப்படும்.

மரத்தை ட்ரான்ஸ்பிளான்ட் செய்த பிறகு சரியாக கவனித்துக் கொண்டால் ஒரு மாதத்திலிருந்து 45 நாளுக்குள் புது இலைகள் துளிர்விடும். துளிர் விட்ட புதிய இலைகளிலும் பூச்சிஅடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இடமாற்றியப்பின் ஒரு வருடத்திற்கு அந்த மரங்களை அதிக கவனமெடுத்து பார்த்துக்கொண்டால் போதும் அதன் பின் பல வருடங்கள் செழித்து திளைக்கும்.”

“நாம் புதியதாய் மரங்கள் நடுகிறோமோ இல்லையோ ஆனால் ஏற்கனேவே இருக்கும் மரங்களையாவது வெட்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டுமே என யோசித்ததில் தோன்றியது தான் இந்த ட்ரீ ட்ரான்ஸ்ப்லேண்டேஷன் ஐடியா” என்கிறார் இளங்கோ.

பல வருடங்கள் பழமையான மரங்கள் தொடங்கி, மெட்ரோ வேலைக்காக வெட்டவிருந்த மரங்கள் வரை இதுவை ஆயிரக்கணக்கான மரங்களை டிரான்ஸ்பிளான்ட் செய்து காப்பாற்றியிருக்கின்றனர்.

இவர்களுக்கு ஒரு பெரிய சல்யூட்!
நன்றி: விகடன்
மேலும் விவரங்கள் அறிய வெப்சைட்: ஜெயம் லாண்ட்ஸ்கேப்
Jeyam Landscape Consultants
New No.12, Old No.44/2 Kandha Samy Street,
Pallipattu, (Near Adyar)
Chennai – 600 113.
Mobile: 09444176934
Email:  ilango@jeyamlandscape.com
[embedit snippet=”whatsapp”]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *