இன்றைய உலகம் புகை மண்டலம் மிகுந்து, புழுதி படிந்து உள்ளது. வாகனங்களில் இருந்து வெளிப்படும் புகையால், சுவாசிக்கும் காற்று கூட, நச்சுப்புகையாக மாறிவிட்டது.
சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்க, இன்றைய காலகட்டத்தில் புகையில்லாத எலக்ட்ரிக் வாகனங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
நவீன வடிவமைப்பு, எளிய பராமரிப்பு, குறைந்த விலை, சிறந்த செயல்திறன் கொண்ட வாகனங்கள், மக்களிடம் அதிக வரவேற்பை பெற்று வருகின்றன.
மாணவர்கள், இல்லத்தரசிகள், தொழிலதிபர்கள் என, அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற வகையில், பல்வேறு மாடல்களில் இவ்வகை வாகனங்கள் வெளிவருகின்றன.
ஏஞ்சல், வி 60, போபோ, அத்யா ஜீல், பாடி உள்ளிட்டவை இவ்வகை வாகனங்களில் பிரபலமானவை.
ஏஞ்சல் மாடல், மின் சைக்கிள் வகையை சார்ந்தது. இதன் மூலம், ஒரு ரூபாய் செலவில் 50 கி.மீ., தூரம் பயணிக்கலாம்.
பஸ் கட்டணத்தை விட குறைந்த செலவே ஆவதால், நிறைவான பயணம் செய்யலாம். பெட்ரோல், சாலை வரி, ரெஜிஸ்ட்ரேஷன், லைசன்ஸ் எதுவும், இந்த வாகனத்துக்கு தேவை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வாகனத்தில் உள்ள பேட்டரியை நாளொன்றுக்கு, 6 முதல் 8 மணி நேரம் சார்ஜ் செய்தாலே போதும்.
இந்தியாவில் கிடைக்கும் எலக்ட்ரிக் சைக்கிள் ஸ்கூட்டர்களை இங்கே பார்க்கலாம்
நன்றி: தினமலர்