சமையலறை கழிவிலிருந்து சமையல் பயோகேஸ்!

வீட்டில் சாப்பிட்ட பின் மிச்சம் இருக்கும் சாதம், ரசம், சாம்பார், காய்கறிகள் மிச்சங்கள் இவற்றை வைத்து வீட்டிலேயே பயோ காஸ் செய்ய முடியுமா? இந்த காஸ் சமையல் காஸ் ஆக உபயோகித்து LPG செலவை மிச்ச படுத்த முடியுமா?

கன்யாகுமரியில் உள்ள விவேகானந்தா கேந்திராவில் இந்த தொழிற் நுட்பம் கண்டு பிடிக்க பட்டு தமிழ்நாட்டில் ஆயிர கணக்கான இடங்களில் உபயோகம் படுத்த படுகிறது என்பது இனிய செய்தி!

இந்த சக்தி சுரபி தொழிற்நுட்பத்தின் சிறப்பு அம்சங்கள்:

 • மற்ற கோபர் காஸ் இயந்திரங்கள் போன்று தினமும் மாட்டு சாணம் தேவை இல்லை. வீட்டு சமையல் கழிவே போதும். முதல் ஒரு முறைதான் சாணம் தேவை. இதனால் வீட்டின் மாடியிலேயே வைத்து கொள்ளலாம்.
 • காப்புரிமை பெற்று சர்வதேச பரிசுகளை பெற்றுள்ளத் தொழிற்நுட்பம்
 • இந்த கலனில் இருந்து வெளியேற்ற படும் நீர் பயிர்களுக்கு நல்ல உரம்

இந்த தொழிர்நுட்பதை பற்றி தினமலரில் வந்துள்ள ஒரு செய்தி:

அரசு மானியத்துடன், ‘பயோகேஸ்’ தயாரிக்கும் கருவியை, குறைந்த விலையில், கிராமங்களில் நிறுவி வரும், ராமகிருஷ்ணன் கூறுகிறார் :

Courtesy: Dinamalar
Courtesy: Dinamalar
 • நான், கன்னியாகுமரியில் உள்ள, ‘விவேகானந்தா கேந்திரம்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தில், பொறியாளராக உள்ளேன்.
 • சமையல் எரிவாயு விலை உயர்வு, சிலிண்டருக்கான மானியமும் குறைக்கப்பட்டதால், ஏழைகளின் குடும்ப செலவும் அதிகரித்து வருகிறது. இப்பிரச்னையை தீர்க்க, சமையலறை கழிவுகளில் இருந்து, ‘பயோகேஸ்’ தயாரிக்கும் முறையை, பொதுமக்களுக்கு இலவசமாக கற்று தந்தோம்.
 • பின், விவேகானந்தா கேந்திரம் உதவியுடன், குறைந்த செலவில், அரசு மானியத்துடன், கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு, ‘பயோகேஸ் பிளான்ட்’ அமைத்து தருகிறோம்.
 • ஒரு கன மீட்டர், ‘கேஸ் பிளான்ட்’ அமைக்க, 19 ஆயிரம் ரூபாய் செலவாகும். மத்திய அரசு, 4,000 ரூபாய் மானியம் தருகிறது.
 • 1 கன மீட்டர் கேஸ் என்பது, ஒரு நாள் உற்பத்தியாகும் எரிவாயுவின் அளவு.இது, 400 கிராம் எடையுள்ள, எல்.பி.ஜி., எரிவாயுவுக்கு இணையானது. 1 கன மீட்டர் எரிவாயு உற்பத்தி செய்ய, 3 முதல், 5 கிலோ, மக்கும் கழிவுகள் தேவைப்படும்.
 • கெட்டுப் போன உணவுகள், அழுகிய காய்கறி, கழிவுநீர் மற்றும் இறைச்சி கழிவுகளை பயன்படுத்தலாம்.காய்கறி கழிவுகளை நன்கு கரைத்து, குளிர்ந்த நிலையில் , சின்டெக்ஸ் பைபர் கன்டெய்னரில் ஊற்ற வேண்டும்.
 • அது எளிதில் நொதித்து, மீத்தேன் வாயு வெளிவந்து, விரைவாக, ‘பயோகேஸ்’ உற்பத்தியாகும்.பின், ‘ஆர்கானிக் பெர்டிலைசர் வாட்டர்’ என்ற தண்ணீரும் வெளியேறும்.
 • இத்தண்ணீரில், செடிகளுக்கு தேவையான எல்லா நுண்ணுாட்ட சத்தும் உள்ளது.
 • எல்.பி.ஜி., வாயுவிற்கு, காற்றை விட அடர்த்தி அதிகம். அதனால், நீண்ட நேரம் காஸ் கசிவு ஏற்பட்டால், சமையல் அறையிலேயே காஸ் தங்கி விடும்.அப்போது, ‘ஸ்டவ்’வை பற்ற வைத்தால், சில நேரங்களில் தேவையற்ற தீ விபத்து ஏற்படும்.
 • ஆனால், ‘பயோகேசின்’ எடை, சற்று லேசானது. இதனால், காஸ் கசிந்தாலும், சீக்கிரம் வெளியேறி விடும். எனவே, தீ விபத்திற்கான வாய்ப்பு மிகவும் குறைவு.
 • தொடர்புக்கு: 04652246296.

இந்த தொழிர்நுட்பதை பற்றிய இரண்டு வீடியோ க்கள்

சக்தி சுரபி – Tamil Documentary

சக்தி சுரபி பயன் படுத்தும் ஒரு இல்லத்தரசியின் அனுபவம்

மேலும் விவரங்களை அறிய:

விவேகானந்தா கேந்திரா கன்னியாகுமரி

நன்றி: தினமலர்

 

 

 

 

2 thoughts on “சமையலறை கழிவிலிருந்து சமையல் பயோகேஸ்!

 1. கண்ணன் says:

  புவி பற்றி பயனுள்ள தகவலறிய இது போன்ற நல்ல வலைதளம் மிக அவசியம்.புவி வலைதளத்ற்க்கு நன்றி

  • admin says:

   அன்புள்ள ஐயா
   தங்களின் ஆதரவுக்கு மிக்க நன்றி.
   -admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *