நாட்டில் விளைவிக்கப்படும் காய்கறிகள், பழங்கள் மற்றும் இதர உணவுப் பொருட்களில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகப்படியான பூச்சிக் கொல்லி கலப்பு இருப்பதாக, மத்திய அரசின் அறிக்கையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
‘இந்திய உணவுப் பொருள் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்’ விளைப்பொருட்களில் கலந்துள்ள பூச்சி கொல்லிகளின் அளவு குறித்து, ஆண்டுதோறும் ஆய்வு நடத்தி வருகிறது. அதற்கான அறிக்கையும் தாக்கல் செய்யப்படுகிறது. இந்நிலையில், 2013 – 14ம் ஆண்டில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள் மற்றும் இதர உணவுப் பொருட்களில் நடத்தப்பட்ட ஆய்வில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிகப்படியான விளைப்பொருட்களில், அனுமதிக்கப்பட்ட அளவை விட மிக அதிக அளவில் பூச்சிக் கொல்லி கலந்திருப்பது தெரிய வந்துள்ளது.
மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
- கடந்த, 2013 – 14ம் ஆண்டில் பயிரிடப்பட்ட விளைப்பொருட்ள் பலவற்றில், அனுமதிக்கப்பட் அளவை விட பூச்சிக் கொல்லி கலப்பு அதிகம் உள்ளது.
- குறிப்பாக, 7,591 காய்கறி மாதிரிகளில், 221 மாதிரிகளில் அதிக பூச்சி கொல்லி கலப்பு காணப்பட்டது. குடை மிளகாய், பச்சை மிளகாய், தக்காளி, முட்டைகோஸ், பாகற்காய், பச்சை பட்டாணி, வெள்ளரி, கொத்தமல்லி இலைகள் உள்ளிட்ட போன்றவற்றில் அதிகப்படியான பூச்சி கொல்லி கலப்பு உள்ளது.
- திராட்சை போன்ற முக்கிய பழ வகைகளிலும், ஏலக்காய் போன்ற வாசனை பொருட்களிலும் அதிகப்படியான பூச்சி கொல்லி கலக்கப்பட்டுள்ளது.
- அரிசி, கோதுமை உள்ளிட்ட தானிய வகைகள் மட்டுமின்றி, பல வகை மீன்களிலும் அதிகப்படியான பூச்சி கொல்லி கலப்பு உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி: தினமலர்
விவசாயத்தை பொறுத்த வரையில் பருத்தி, கத்திரி போன்ற பயிர்களுக்கு மிக அதிகம் பூச்சிகள் தாக்குகின்றன என்பது ஆய்வின் மூலம் தெரிந்த உண்மை.
இதே போல், முட்டை கோஸ் மற்றும் காலி பிளவர் காய்கறிகளிலும் மிக அதிகம் பூச்சி கொல்லிகள் பயன் படுத்த படுகின்றன.
பழங்களில் திராட்சையில் ரசாயன பூச்சி கொல்லி பிரயோகம் மிக அதிகம்
இவற்றில் இருந்து எப்படி நம்மை பாதுகாத்து கொள்வது? – விரைவில் பார்ப்போம்
One thought on “உணவு பொருட்களில் பூச்சிக்கொல்லி கலப்பு”