அழுகிய, காய்கறி கழிவுகளில் இருந்து எரிவாயு உற்பத்தி

:அழுகிய, காய்கறி, பழம் மற்றும் ஈரக்கழிவுகளில் இருந்து, எரிவாயு தயாரித்து, அதன் மூலம், தெரு விளக்குகளை எரிய வைக்கும் புதிய முயற்சியில், பொன்னேரி சிறுவாக்கம் ஊராட்சி நிர்வாகம் ஈடுபட்டு உள்ளது.

மீஞ்சூர் ஒன்றியம், சிறுவாக்கம் ஊராட்சி, குப்பையை பிரித்து கையாள்வதில், முன்மாதிரியாக இருந்து வருகிறது. இதற்காக, ஆங்காங்கே, மக்கும், மக்காத குப்பையை கொட்ட, தொட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

ரூ.7 லட்சம்:

வீடு மற்றும் கடைகளில், இருந்து வெளியேற்றப்படும், கழிவுகளை கொண்டு, எரிவாயு தயாரித்து, தெரு விளக்குகளுக்கு பயன்படுத்தும் முறையை அறிந்த ஊராட்சி நிர்வாகம், அங்குள்ள தனியார் கன்டெய்னர் நிறுவனத்தின் உதவியை நாடியது. அந்நிறுவனத்தின், மூலம், ஏழு லட்சம் ரூபாய் நிதியில், காய்கறி, பழம் மற்றும் ஈரமான கழிவுகளில் இருந்து எரிவாயு தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்தியது. இதற்காக, எலவம்பேடு பகுதியில் உள்ள சுடுகாடு அருகே, எரிவாயு தயாரிக்கும் முனையம் அமைக்கப்பட்டு உள்ளது.

Courtesy: dinamalar
Courtesy: dinamalar
Courtesy: dinamalar
Courtesy: dinamalar

செயல்பாடு:

தினமும், வீடு மற்றும் கடைகளில் இருந்து பெறப்படும், காய்கறி, பழம் உள்ளிட்ட ஈரமான கழிவுகளை, அதற்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டு உள்ள கிரைண்டர்களில் அரைத்து, கூழாக்கப்படுகிறது, கூழாக்கப்பட்ட கழிவு, பிளாஸ்டிக் உருளை வழியாக, அருகில் உள்ள இரண்டு பெரிய சிலிண்டர்களில் ஊற்றப்படுகிறது.

அதிலிருந்து பெறப்படும் எரிவாயு, 1.5 கே.வி., ஜெனரேட்டருக்குள் செலுத்தி இயக்கப்படுகிறது. அதன் மூலம், பெறப்படும் மின்சாரத்தை, தெரு விளக்குகளுக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

தினமும், 100 கிலோ கழிவுகள் மூலம், 1,500 வோல்ட் மின்சாரம் பெறப்பட்டு, அதன் மூலம், எட்டு முதல், 10 மணி நேரம் வரை, 50 தெரு விளக்குகளை எரிய வைக்கலாம். தற்போது, மேற்கண்ட திட்டப்பணிகள் முழுமையடைந்து, சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு உள்ளது. ஓரிரு நாளில், மேற்கண்ட திட்டம் மூலம், தெரு விளக்குகள் எரிய உள்ளன.

இதுகுறித்து, சிறுவாக்கம் ஊராட்சி தலைவர் திலகவதி பாளையம் கூறியதாவது: ஊராட்சியை குப்பை இல்லாமலும், சுகாதாரமாகவும் மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு உள்ளோம். மேற்கண்ட எரிவாயு உற்பத்தி மையத்தின் அருகில், 4.60 லட்சம் ரூபாய் செலவில், ஆண்கள் கழிப்பறை ஒன்று அமைக்கப்படுகிறது. அதிலிருந்து பெறப்படும் கழிவுகளின் மூலமும் மேலும் கூடுதலாக எரிவாயு உற்பத்தி செய்து, மூன்று கிலோவாட் ஜெனரேட்டரை இயக்கி அதன் மூலம், தெரு விளக்குகளுக்கு பயன்படுத்தும் வகையில் பணிகளை மேற்கொண்டு உள்ளோம். இதேபோன்று, மேலும் இரண்டு இடங்களில், எரிவாயு உற்பத்தி செய்யவும் திட்டமிட்டு வருகிறோம். ஊராட்சியில் உள்ள அனைத்து தெரு விளக்குகளையும் மேற்கண்ட திட்டம் மூலம் எரிய வைக்க உள்ளோம்.

மற்ற ஊரிலும் காய்கறி மார்கெட் அருகே நாறி கிடக்கும் கழிவுகளை கொண்டு இப்படி  செய்யலாமே?

நன்றி: தினமலர்

One thought on “அழுகிய, காய்கறி கழிவுகளில் இருந்து எரிவாயு உற்பத்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *