நீலகிரியில் வாழும் ‘டிரவுட்’ மீன்கள்!

தென்னிந்தியாவில், நீலகிரி அவலாஞ்சி பகுதிகளில் மட்டுமே உள்ள ‘டிரவுட்’ (Trout) மீன்களை பாதுகாக்க மீன்வளத்துறை தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

Courtesy: Hindu
Courtesy: Hindu

இந்தியாவில் காஷ்மீர், இமாச் சலப் பிரதேசம் போன்ற பனி பிரதேசங்களில் வாழும் ‘டிரவுட்’ வகை மீன்கள் தென்னிந்தியாவில் நீலகிரி மாவட்டத்தில் மட்டுமே காணப்படுகின்றன. 5 முதல் 20 டிகிரி செல்சியஸ் வெப்பம் உள்ள பகுதிகளில் மட்டுமே வாழும் இவ் வகை மீன்கள், நீலகிரி மாவட் டத்தில் அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு போன்ற பகுதிகளில் உள்ள நீரோடைகளில் உள்ளன.

இவ்வகை மீன்கள், தான் பொரிக் கும் முட்டை மற்றும் குஞ்சுகளை தின்றுவிடும் குணாதிசயங்களைக் கொண்டதால், அழியும் தருவாயில் உள்ளன.

இந்த மீன்கள் அக்டோபர் மாதத்தில் முட்டையிடும். இவை நீரோட்டத்தின் எதிர்திசையை நோக்கிச் செல்லும் தன்மை கொண்டவை. இதனால், பின்னால் வரும் மீன்கள் முட்டைகளை தின்று விடும். இதைத் தடுக்க, முட்டை யிடும் காலத்தில் பெண் மீன்களி லிருந்து முட்டைகளையும், ஆண் மீன்களிலிருந்து விந்து அணுக்களையும் மீன்வளத்துறை அதிகாரிகள் சேகரிக்கின்றனர். பின்னர், முட்டைகள் மீது விந்தணுக் களை போட்டு விடுகின்றனர். 60 நாட்களுக்குப் பின்னர் இந்த முட் டைகளில் இருந்து மீன் குஞ்சுகள் பொரிந்துவிடும். இந்த குஞ்சுகள் நீர்நிலைகளில் விடப்படும்.

பாதுகாக்க முயற்சி

இந்த மீன் இனத்தை காப்பாற் றுவதற்காக அவலாஞ்சி பகுதியில் குஞ்சு பொரிப்பகம் செயல்பட்டு வருகிறது. ஆங்கிலேயர் காலத்தில் இந்த மீன்கள் வேட்டையாடப் பயன்படுத்தப்பட்டன. மிகவும் வேகமாகச் செல்லும் இந்த மீன்கள், இறந்த உணவை உட்கொள்ளாது. நீரின் மேல் மிதக்கும் உயிர் உள்ள பூச்சிகள், புழுக்களை மட்டுமே உண்ணும். சாதாரண தூண்டில்களில் சிக்காத இந்த மீன்களை ‘பிளய்ஸ்’, ‘ஸ்பூன்’ எனப்படும் தூண்டில்கள் மூலமே பிடிக்க முடியும்.

நீலகிரி மாவட்டத்தில் வரையாடு, நீலகிரி லங்கூர் குரங்குகள் என்ற சில முக்கிய விலங்குகள் பட்டியலில், இந்த ‘டிரவுட்’ மீன்களும் இடம்பெற்றுள்ளன. இந்த மீன் இனத்தைப் பாதுகாக்க மீன்வளத்துறை தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

மீன்வளத் துறை இணை இயக் குநர் ரவிச்சந்திரன் கூறும்போது, ‘1907-ம் ஆண்டு நியூஸிலாந்தில் இருந்து ‘டிரவுட்’ மீன்கள் நீலகிரியில் அறிமுகப்படுத்தப்பட்டன. அக்டோ பர், நவம்பர், டிசம்பர் மாதங்கள் இந்த மீன்களின் இனப்பெருக்க காலம். இந்த காலகட்டத்தில் முட் டைகள் சேகரிக்கப்பட்டு, பொரிப் பகத்தில் சுமார் ஒரு லட்சம் குஞ்சு கள் பொரிக்கப்பட்டு நீர்நிலைகளில் விடப்படும்.

இந்த மீன்களை வேட்டையாட (பிடிக்க) தடைவிதிக்கப்பட்டுள்ளது. தேசிய மீன்வள அபிவிருத்தி திட்டத்தின்கீழ் அவலாஞ்சியில் உள்ள பொரிப்பகம் ரூ.30 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு சுமார் 5 லட்சம் குஞ்சுகளை உற்பத்தி செய்து நீர்நிலைகளில் விட முயன்று வருகிறோம்.

அழிவுப் பட்டியலில் உள்ள இந்த மீன்கள் விற்கப்படுவதில்லை.

 நன்றி:ஹிந்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *