கருவேலமரங்களை ஒழிக்க களமிறங்கிய மக்கள்!

மதுரையில் குடியிருப்பு பகுதிகளின் துாய்மையை காப்பாற்ற அரசை எதிர்பார்க்காமல், களத்தில் இறங்கி கருவேலமரங்களை ஒழித்து குடியிருப்பு பகுதிகளை துாய்மையாக்கி உள்ளனர் எல்லீஸ்நகரின் ஒருபகுதியை சேர்ந்த மக்கள்.

ரோட்டில் தனி மனிதனால் வீசி எறியப்படும் குப்பையை கூட பொறுக்க அரசைநம்பியிருக்கும் எண்ணம் மக்களின் மனங்களில் வளர்ந்து வருகிறது. இதனால் நகரின் துாய்மை என்பது குப்பைகளாய் காற்றில் பறந்து வருகிறது.

அதேசமயம், பொதுநலம் என்ற நல்லெண்ணம் சிலரிடம் இருப்பதால் கண்மாய்கள் மீட்பு, மரங்கள் வளர்ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற பணிகளும் நடந்து வருகின்றன. அந்த பட்டியலில் எல்லீஸ்நகர் வீட்டுவசதி வாரிய டி, எம் டைப் வீடுகளின் குடியிருப்பு மக்களும் இடம்பெற்றுள்ளனர்.

Courtesy: Dinamalar
Courtesy: Dinamalar

இப்பகுதியில் 300 குடியிருப்புகள் உள்ளன. இதன் மையப்பகுதியில் ஒரு ஏக்கர் பரப்பு காலியாக உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் போலீஸ் குடியிருப்பு கட்ட திட்டமிடப்பட்டது. ஆனால் அந்த பகுதியில் பூங்கா அமைக்க வேண்டும் என குடியிருப்பு மக்கள் வலியுறுத்தினர். பல காரணங்களால் அந்த பகுதி முழுவதும் கருவேலமரங்கள் நிறைந்து புதர்மண்டி

கிடந்தது. இதனால் பலவிதங்களில் பாதிக்கப்பட்ட மக்கள், அந்த இடம் முழுவதையும் துாய்மை செய்ய அரசுத்துறைகளிடம் சில ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.எந்த பயனும் இல்லாததால் அவர்களாகவே இணைந்து நிதி திரட்டி அந்த பகுதி முழுவதையும் துாய்மைப்படுத்தினர்.

இந்த பகுதி மக்களை போன்று நகரில் பல இடங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் பகுதிகளில் இணைந்து செயல்பட்டால் தான் துாய்மையான மதுரையை உருவாக்க முடியும்.

நன்றி: தினமலர் 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *