ஒரு டன் குப்பையை பெரிய அளவில் மாசில்லாமல், வெறும் இரண்டு கிலோ சாம்பலை மட்டுமே வெளியேற்றும், “பிளாஸ்மா ஸ்வாட்ச்’ (Plasma Swatch) என்ற நவீன இயந்திரத்தை மாநகராட்சியில் அறிமுகப் படுத்த, “தனியார் நிறுவனம்’ஒன்று முயற்சித்து வருகிறது.
தொழில்நுட்பம்
“பிளாஸ்மா’ மூலம் எரிப்பது என்பது, “மைக்ரோ ஓவனில்’ சமைப்பது போன்றது; நெருப்பு இல்லாமல் அந்த ஏவலை நடக்கிறது.
வெளிநாடுகளில், இந்த தொழில்நுட்பத்தில், ஆயிரக்கணக்கான டிகிரி செல்சியஸ் வரை உருவாகும் வெப்பத்தில், குப்பையில் உள்ள அணுக்கள் சீர்குலைக்கப்பட்டு; குப்பை அமிலம் கலந்த வாயுவாகவும், சாம்பலாகவும் மாற்றப் படுகிறது.இந்த வாயுசுத்திகரிக்கப் பட்டு, மின் நிலையங்களுக்கு எரிவாயுவாக பயன்படுகிறது. இந்த தொழில்நுட்பம் மூலம், குறைந்த அளவே மாசுஏற்படுவதாக கூறப்படுகிறது.
இதை, “இன்னோவேடிவ் என்வைரொமென்டல் சொல்யூஷன்ஸ்,’ (Innovative environmental solutions) என்ற ஒரு தனியார் நிறுவனம், இந்தியாவில் உள்ள, பல்வேறு மாநகராட்சிகளில் அறிமுகப் படுத்த முயற்சித்து வருகிறது.
மாநகராட்சிக்கு கடிதம்
- கர்நாடகாவில் பெங்களூரு மாநகராட்சியிலும், கேரளாவில் திருச்சூரிலும், ஆந்திராவில் நந்தியால் நகராட்சியிலும், இந்த, தொழில்நுட்பம் சோதனை அடிப்படையில் பயன்பாட்டில் உள்ளது.
- சென்னை மாநகராட்சியில், இந்த இயந்திரத்தை சோதனை அடிப்படையில் பயன்படுத்த அனுமதி கேட்டு, அந்த நிறுவனம் கடிதம் வழங்கியுள்ளது.
- இதற்காக, பெங்களூருவில் இருந்து, 50 கிலோ குப்பையை கையாளும் ஒரு இயந்திரம், சென்னைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.
இது குறித்து, அந்த நிறுவனத்தின் “விற்பனை பிரிவு அதிகாரி அருண்பிரசாத்’ கூறியதாவது:
- இந்த நவீன இயந்திரம் அதிகபட்சமாக, 500 கிலோ குப்பையை, எட்டு மணிநேரத்தில் சாம்பலாக்கும். ஒரு இயந்திரம் நாளொன்றுக்கு ஒன்றரை டன் குப்பையை கையாளும்
- இதன் விலை, 15 லட்சம் ரூபாய். இயந்திரத்தை இயக்க மின்சாரமோ, எரிபொருளோ தேவையில்லை. மின்காந்தம் மூலம், 450 டிகிரி வெப்பத்தை ஏற்படுத்தி, குப்பை சாம்பல் ஆக்கப்படுகிறது.
- இதன் மூலம், வெளியேறும் டயாக்சின் (Dioxin) போன்ற நச்சுத்தன்மை கொண்ட வாயு, 850 டிகிரி செண்டிகிரேடு வெப்பத்திற்கு உட்படுத்தப்படுகிறது.
- அதன் பிறகு வெளியேறும் புகை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் நிர்ணயித்துள்ள புகை மாசுவின் வரம்பிற்கு உட்பட்டுள்ளது.
- இந்த இயந்திரத்திற்கு பராமரிப்பு தேவையில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, மட்டும் காந்தத்தை மாற்றினால் போதும். இயந்திரத்தை பொருத்த, 200 சதுரடி இடம் போதுமானது.இவ்வாறு அருண்பிரசாத் கூறினார்.
எல்லா ஊரிலும் குப்பைகளை என்ன செய்வது என்று தெரியாமல், குப்பை மேடாக போட்டு வைத்து வியாதிகள் பரப்பி கொண்டு இருக்கிறோம்,
இந்த முறையில் மின்சாரமும் இல்லாமல், குறைந்த முதலீட்டில் குப்பைகளை சரி செய்ய முடியும் போல் இருக்கிறது..
நன்றி: தினமலர்