ஊட்டி ஏரியில் உள்ள நீர் மிகவும் மாசு பட்டு உள்ளதாக தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவித்து உள்ளது.
தமிழ் நாட்டில் சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் ஊட்டி நகரில் எரி மிகவும் புகழ் பெற்றது. ஒரு காலத்தில், இந்த எரி ஊட்டி மக்களின் நீர் ஆதாரமாக இருந்தது. இப்போது, சாக்கடை வந்து விழும ஒரு அசிங்கமான இடம் ஆகி விட்டது
நல்ல நீரில் 3mg/liter இருக்க வேண்டிய Biological oxygen demand (BOD) ஊட்டி ஏரியில் 11mg/liter அளவு இருக்கிறது. அதே போல் நீரில் உள்ள கோளிபாறம் (Coliform) என படும் கிருமிகள் அளவு 5000MPN/ml அளவுக்கு பதில் 10322MPN /ml அளவு உள்ளது.
தமிழ் நாட்டில் உள்ள மற்ற ஏரிகளின் நிலைமை:
புலிகட் எரி நீர் குடிக்கும் அளவுக்கான தரத்தில் இல்லை. சென்னை நகரத்திற்கு நீர் கொடுக்கும் ரெட் ஹில்ல்ஸ் எரி மற்றும் போரூர், பூண்டி ஏரிகளும் இந்த நிலைமை தான். ரெட் ஹில்ல்ஸ் ஏரியில் 4744MPN/ml அளவு Coliform கிருமிகள் உள்ளன.
நன்றி: ஹிந்து