டால்பின் வகை மீன்களை பற்றி நீங்கள் தெரிந்து கொண்டு இருப்பீர்கள்.
மனிதர்களுக்கு அடுத்த படியாக அறிவில் சிறந்த யானை, குரங்கு போன்று
டால்பின்கள் அதிகம அறிவு உள்ளவை.
உங்கள்ளுக்கு தெரியுமா அவை நதிகளிலும் இருக்கின்றன என்று?
இந்தியாவில் கங்கை மற்றும் பிரமபுத்ரா நதிகளில் வாழும் ஒரு வகையான
டால்பின் (Gangetic Dolphin) இங்கே மட்டும் வாழ்கின்றன.
இவை நதிகளில் உள்ள கிட்டதட்ட 200 சென்டிமீட்டர் 7ஆடி வரை வளரும் இவை, இப்போது அழிந்து கொண்டு இருக்கும் பட்டியல் (Critically endangered list) இடம் சேர்ந்து விட்டன.
சிறு மீன்களையும் கங்கை ஆற்றின் கீழே வளரும் உயிரினங்களையும் இவற்றின் உணவுகள்.
இந்த மீன்களுக்கு கண் பார்வை கிடையாது என்பது ஒரு வியப்பு தரும் செய்தி. வெறும் Ultrasound அலைகளால் இவை தன்னுடைய வழியையும் இரையையும் தேடி கொள்கின்றன!
இப்போது பீகாரில் விக்ரம் ஷீலா (Vikramshila dolphin sanctuary என்ற ஒரு சிறிய இடத்தில மதிய அரசு கங்கை டால்பின் சரணாலயம் அமைத்து இருக்கிறது.
மற்ற இடங்களில், இந்த மீனுக்கு அதிகமான எதிரிகள். வலை போட்டு எடுக்கும் மீனவர்கள், இயந்திர படகுகள், கங்கையில் கலக்கும் சாக்கடைகள் போன்றவைகள்.
இப்போது நூறுக்கும் குறைவாக இருப்பதாக அறிவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
மேலும் தகவல் அறிய: