ஒரு காலத்தில் சென்னை போன்ற நகரங்களை சுற்றி ஏரிகளும் நீர் நிலைகளும் அதிகம் இருந்தன. இந்த நீர் நிலைகள் ஒரு காலத்தில் சுத்தமாக இருந்தன. ஊர்கள் எப்போது எல்லா பக்கமும் பரவுவதால் (Urban Sprawl) , இந்த நீர் நிலைகள் மண் போட்டு மூட படுகின்றன.
அல்லது, சென்னை வேளச்சேரி அருகே உள்ள பள்ளிகரணை போன்று, குப்பைகள் போட்டு நிரப்புகின்றனர்.சுத்தமாக இருந்த நீர் நிலைகளை இப்படி குப்பை போட்டு வைத்து கெடுப்பது என்பது மனிதனுக்கு மட்டுமே சாத்தியம்!
அசாமில் உள்ள குவாஹாதி நகரின் வெளியே உள்ள நீர் நிலைகளில் வெளி நாட்டில் இருந்து வரும் நாரைகள் (Storks) தங்கும்
ஹிந்துவில் இப்படி பட்ட ஒரு நீர் நிலையில் வந்து வாழு நாரைகளை பற்றிய புகைப்பட தொகுப்பு – பார்க்க கஷ்டமாக இருக்கிறது



எதையும் கெடுப்பது எப்படி என்பதற்கு நம் பாடம் எடுக்கலாம்
நன்றி: ஹிந்து