தினமலரின் வந்த பைகாரா எரி கழிவு நீர் விவகாரம் பற்றி சிறிது ஆராய்ச்சி செய்ததில் இந்த விஷயங்கள் தெரிந்தன
இந்த நிறுவனம் Sterling Biotech பெயர் என்பதாகும். இது ராலிஸ் (Rallis) என்ற நிறுவனத்தின் ஒரு பகுதி (ராலிஸ் டாடா குழுமத்தின் ஒரு பகுதி)
இந்த நிறுவனத்தின் தொழிற்சாலை ஊட்டியில் சோலையூர் என்ற கிராமத்தில் இருக்கிறது.
இந்த நிறுவனம் தமிழ் நாடு மின்சார நிறுவனத்துடன் (TNEB) போட பட்ட ஒப்பந்த படி, ஒவ்வொரு நாளும் 5000 லிட்டர் பைகாரா ஏரியில் இருந்து நீர் பயன் படுத்தி மிருகங்களின் எலும்புகளில் இருந்து கல்டின் (Gelatin) என்ற ரசாயனம் மற்றும் di-calcium phosphate என்ற ரசாயனமும் செய்ய அனுமதி வாங்கி உள்ளது. எலும்புகளை அலம்பி சுத்த படுத்த பைகாரா எரி நீர் பயன் படுத்துகிறார்கள்
ஆனால் 2006 வருடமே இதை பற்றி Down To Earth என்ற ஊடகத்தில் புகார் வந்து உள்ளது
சோலையூர் கிராமத்தில் உள்ள தோடா பழங்குடி மக்கள் இந்த தொழிற்சாலை சுத்தம் செய்ய படாத கழிவு நீரை நேரடியாக
ஏரியில் கலப்பதாக குறை சொல்லி உள்ளனர். இந்த எரி நீர் தான் குடிக்கவும் பிறகு பவானி ஆற்றின் நீராகவும் ஆகிறது
இன்று வரை தமிழ் நாடு மின்சார வாரியமோ தமிழ் நாடு சுற்று சூழல் வாரியமோ எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை
இதோ இதை பற்றிய செய்திகள்: