இரண்டு சிறகுகளையும் நன்றாக விரித்து வைத்துக்கொண்டு கரையோர மரங்களில் நீர்க்காகங்கள் உட்கார்ந்திருப்பதைப் பார்க்கலாம். ஈரமாக இருக்கும் சிறகுகளைக் காய வைப்பதற்காக அப்படிச் செய்கின்றன. நீரில் நீந்துவதைவிட இப்படித்தான் இதை நன்றாகப் பார்க்க முடியும். இறக்கைகளை இயற்கையாகவே பாதுகாக்கும் மெழுகு போன்ற பொருள் இவற்றின் உடலில் சுரப்பதில்லை. அதனால்தான் இந்த ஏற்பாடு.இந்த பறவைகளை ஏரிகள் அருகிலும் நதிகரைகளிலும் அதிகம் பார்க்கலாம்
பெயர்க் காரணம்:
காக்கையைப் போலக் கறுப்பாக இருப்பதால்தான் இப்பெயர். அதேநேரம் காக்கையைவிட வாலும் கழுத்தும் நீளம்.

வகைகள்:
தமிழகத்தில் பெரும்பாலும் காணப்படும் இரண்டு வகைகள் – சிறிய நீர்க்காகம் (Little Cormorant), பெரிய நீர்க்காகம் (Great Cormorant).
அடையாளங்கள்:
நீரில் இருக்கும்போது இந்தப் பறவை வாத்தைப் போலத் தோற்றமளிக்கும். வாத்துக்கு இருப்பதைப் போலவே, இதன் கால்களில் சவ்வு இருக்கும்.
சிறிய நீர்க்காகங்கள் அண்டங்காக்கையைவிடப் பெரிதாக இருக்கும். ஆறு, குளம் குட்டை போன்றவற்றில் காணப்படும். பெரிய நீர்க்காகம் இதைவிட இரண்டு மடங்கு பெரிதாக இருக்கும். ஆறு, ஏரி போன்ற பெரிய நீர்நிலைகளில் கூட்டமாகக் காணப்படும். நீரில் அல்லது நீர்நிலைகளுக்கு அருகில் உள்ள மரங்களில் கூடு வைக்கின்றன.
பெரும்பாலான நீர்ப்பறவைகளைப் போல மீன்தான் இவற்றின் உணவு.
உணவு:
தனித்தன்மை: நீர்க்காகங்கள் தண்ணீருக்கு அடியிலும் நீந்திச் செல்லும் தன்மை கொண்டவை. நீர்த்தேக்கத்தின் மதகுகளில் நீர் வெளியேறும் பகுதியில் நீந்தி, அலகால் மீன்களைப் பிடித்துச் சாப்பிடும்.
நன்றி: ஹிந்து