பூக்கும் காலத்தில் இந்த மரம் இருக்குமிடத்தை கண்டுபிடிக்கப் பெரிதாகக் கஷ்டப்பட வேண்டியதில்லை. ஏனென்றால், இந்த மரம் இருக்கும் இடத்தை நெருங்கும்போதே மனதை மயக்கும் மென்மையான நறுமணம், மெலிதாக நாசிக்குள் நுழைந்து நம்மைச் சுண்டி இழுக்கும்.
அலங்கார மரங்களைப் போன்ற அழகான, பெரிய மலர்கள் இல்லாத குறையை இந்த நறுமணம் பூர்த்தி செய்துவிடுகிறது. நாகஸ்வர இசைக்கருவியைப் போலிருக்கும் வெள்ளை மலர்கள் கொத்துக்கொத்தாகப் பூத்திருக்கும் அந்த மரம் மரமல்லி. பன்னீர் புஷ்பம் என்றும் அழைக்க படுகிறது.நெட்டுக்குத்தாக மிகவும் உயரமாக, வளரக்கூடிய மரம்.Millingtonia hortensis என்ற தாவரவியல் பெயர் கொண்டது

பக்கவாட்டில் சரிந்து செல்லும் கிளைகளில் மலர்கள் பூத்துக் குலுங்கும். பூக்கும் காலத்தில் மரத்தின் அடியில் வெள்ளை மலர்ப்படுக்கையை காணலாம். இரவில் இரை தேடும் பூச்சிகள் இந்த மரத்தின் மலர்களில் மகரந்தச் சேர்க்கை செய்வதாக நம்பப்படுகிறது. மரத்தின் கிளைகளின் நடுப்பகுதியில் ஆழமான பிளவுகள் இருக்கும், அதனால் தக்கையாக (cork) பயன்படுத்தப்படுகிறது. ஆகையால் Indian Cork Tree என்றும் அழைக்க படுகிறது
விஷமாகும் உணவு, காய்ச்சலை மட்டுப்படுத்த, நுரையீரல் டானிக் ஆக இந்த மரத்தின் வேரினுடைய கஷாயமும், காய வைக்கப்பட்ட மலர்களில் இருந்து வரும் புகை ஆஸ்துமாவுக்கும் பிலிப்பைன்ஸில் மருந்தாகப் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. மற்றபடி தனி அடையாளம் கொண்ட நறுமணத்துக்காகவும் அழகுக்காகவும் வீட்டுத் தோட்டங்கள், தெருக்களில் இந்த மரம் வளர்க்கப்படுகிறது.
– நன்றி: Flowering trees of Banglore, S.Karthikeyan
நன்றி: ஹிந்து, senduherbals
அன்புள்ள ஐயா, இது மரமல்லி. பன்னீர் என்பது வேறு. பல சிவாலயங்களில் பன்னீர் தல விருட்சமாக உள்ளது. அது நீங்கள் சொல்லும் மரமல்லி அல்ல.
அன்புடன் பன்னீர் மரம் பற்றி பார்க்கவும்
அரசு
Thank you sir for your kind clarifications. regards – admin