ஐரோப்பாவிலிருந்து உணவு தேடி வந்த, ‘பிளமிங்கோ’ Flamingo பறவைகள் விருதுநகரில் முகாமிட்டுள்ளன.
விருதுநகர் குல்லுார் சந்தை அணையில், கடந்த சில வாரங்களாக வெள்ளை நிற இறக்கையும், அலகு, கால், வால் பகுதி ரோஸ் நிறமும் உடைய ஐரோப்பிய, ‘பிளமிங்கோ’ பறவைகள் அதிகளவில் உள்ளன. இவற்றை மக்கள் பார்த்து ரசிக்கின்றனர்.
மாவட்ட வனத்துறை உயிரியலாளர் பார்த்தீபன், ”இப்பறவைகள் ஐரோப்பா, மங்கோலியா, வட அமெரிக்கா போன்ற நாடுகளில் வசிப்பவை. நவம்பர், டிசம்பர் மாதங்களில், அங்கு கடும் குளிராக இருக்கும் என்பதால், அங்கிருந்து ராமநாதபுரம், விருதுநகர், துாத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களுக்கு உணவிற்காக வந்து விடும். ஜூன் மாத துவக்கத்தில், மீண்டும் சென்று விடும்,” என்றார்.
நன்றி: தினமலர்