பருவகால மாறுதல்களைக் கண் காணிப்பதற்காக, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவால் அனுப்பப்பட்ட ‘டீப் ஸ்பேஸ் கிளைமேட் அப்சர் வேடரி’ (டிஎஸ்சிஓவிஆர்) செயற்கைக்கோள் விண்வெளியில் 16 லட்சம் கி.மீ. தொலைவுக்கு அப்பால் இருந்து எடுத்த பூமியின் புகைப்படத்தை அனுப்பியுள்ளது.
டிஎஸ்சிஓவிஆர் எடுத்து அனுப்பிய முதல் புகைப்படம் இதுவாகும். டிஎஸ்சிஓவிஆர் செயற்கைக்கோளில் எர்த் பாலிகுரோமேடிக் இமேஜிங் கேமரா (Earth Polychromatic Imaging Camera) (எபிக்) பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமரா மூலம் கடந்த 6-ம் தேதி பூமியைப் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது டிஎஸ்சிஓவிஆர்.
10 வெவ்வேறு விதமான புகைப்படங்களை அகச்சிவப்பு முதல் புற ஊதா வெளிச்சம் என பல்வேறு வகைகளில் படம் பிடித்து அனுப்பியுள்ளது இந்த செயற்கைக்கோள்.
இதில் பூமி நீலநிறத்தில் ஆங்காங்கு வெள்ளை நிறத்துடன் காணப்படும் புகைப்படம் மிக அற்புதமாக உள்ளது. இதுவரை எடுக்கப்பட்ட பூமியின் புகைப்படங்களிலேயே மிக அழகான ஒன்றாகவும் உள்ளது.
இந்த புகைப்படத்தைப் பார்த்த அமெரிக்க அதிபர் ஒபாமா, “தற் போதுதான் இந்த நீல மார்பிள் புகைப்படம் கிடைத்தது. நமக்கு இருக்கும் ஒரே வாழத்தகுந்த கிரகத் தைப் பாதுகாக்க வேண்டும் என்பதை அழகாக நினைவுபடுத்து கிறது” என அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தில், பாலைவனம், மணற்பரப்புகள், நதிகள், கலவையான மேக மூட்டம் ஆகியவை மிகத் தெளி வாகத் தெரிகின்றன. ளனர்.
புவி வளிமண்டலத்தில் ஓசோனின் அளவு, தாவர வளர்ச்சி ஆகிய வற்றைக் கண்காணிக்க இந்த செயற்கைக்கோள் உதவியாக இருக்கும். மேலும், எரிமலை வெடிப் புகளால் ஏற்படும் மாற்றங்களைக் கணக்கிடவும் இது உதவும்.
நன்றி: ஹிந்து