சின்ன வயசில் எனக்கு நினைவில் உள்ள சில பசுமையான நினைவுகளில் ஒன்று சிட்டுக்குருவிகள் வீட்டில் வந்து கூடு கட்டுவது. சீலிங் பானில் அடி படாமல் இருக்க நாங்கள் அதை போடாமலையே இருப்போம். பாய்ந்து பாய்ந்து இரண்டு குருவிகளும் அழகாக கூடு கட்டும்.சிறிது நாட்களில் சிறு குருவிகளின் சப்தங்கள் வரும். குட்டிகளுக்கு அம்மாவும் அப்பாவும் அழகாக உணவு ஊட்டும். ஒரு மாதத்தில் எல்லாம் கிளம்பி சென்று விடும்.
இந்த அனுபவங்களை இந்த தலைமுறைக்கு தெரியாமலேயே போக போகிறது.. சிட்டு குருவிகள் அழிந்து வருவது பற்றிய தகவல் விகடன் இருந்து…
நகரமயமாக்கத்தின் விளைவு இந்த சிறிய பறவைகளின் வாழ்வாதாரத்தை பறித்து விட்டது. ஓட்டுவீடுகள் மறைந்து சிமெண்டு கட்டிடங்கள் அதிகரிக்க அதிகரிக்க சிட்டுக்குருவிகளின் ‘கீச் கீச்’ சத்தங்கள் குறைந்து வந்த நிலையில், செல்போன் டவர்களின் வருகை இந்த பறவைகளின் வாழ்வியல் இயக்கத்தையே அடியோடு புரட்டி போட்டு விட்டது.
செல்போன் டவர்களில் இருந்து வெளியாகும் கதீர்வீச்சுகள் சிட்டுக்குருவிகளின் உடல் இயக்கத்தையே சிதைத்து விடுகின்றன. என்றுதான் சொல்ல வேண்டும். குழந்தை பெற்று கொள்ள முடியாது என்ற சூழல் மனித இனத்துக்கு ஏற்பட்டால் எத்தகையை வேதனையை மனித இனம் சந்திக்கும்.
அதேபோல்தான் செல்போன் டவர்களால் சிட்டுக்குருவிகள் தங்கள் இனத்தை பெருக்கி கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. பஞ்சாப்பில் செல்போன் கதிர்வீச்சு இருக்கும் பகுதிகளில் இருந்து கண்டெடுக்கப்பட்ட 50 சிட்டுக்குருவிகளின் முட்டைகளில் 30 முட்டைகள் சேதமடைந்து இருந்தது தெரிய வந்தது.
அதுமட்டுமல்ல தற்போது வயல்வெளிகளில் அடிக்கப்படும் பூச்சிக் கொல்லி மருந்துகளால் விளைவிக்கப்படும் தானியங்களை உண்ணும் சிட்டுக்குருவிகளால் முறையான இனப் பெருக்கத்தில் ஈடுபட முடிவதில்லை. இந்த தானியங்களை சாப்பிடும் சிட்டுக்குருவிகள் இடும் முட்டைகளின் ஓடுகள் வழக்கமான தடிமனை இழந்து விடுகின்றன.
இதனால் அடை காக்கும் போது, குறிப்பிட்ட நாட்களுக்கு முன்னரே சிட்டுக்குருவிகளின் முட்டைகள் வலுவிழந்து உடைந்து போய் விடுகின்றன. இதனால் சிட்டுக்குருவிகள் இனப் பெருக்கமே பாதிக்கப்படுகிறது.
இதன் காரணமாக அந்த பறவைகளின் குணத்திலும் போக்கிலும் மாற்றம் நிகழ்கிறது. என்ன நடக்கிறது என்றே தெரியாமல்அடை காக்கும் போது முட்டைகள் உடைந்து போவதால், சாதுவான சிட்டுக்குருவிகள் தற்போது மூர்க்கத்தனமாகி வருகின்றன.
மனிதனின் சுயநலத்தால் சிட்டுக்குருவி இனமே அழிந்து வரும் நிலையில் தற்போது சூயிங்கத்தை உணவு பொருள் என்று சாப்பிட்டு, அதனால் உயிரிழக்கும் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சூயிங்கம் மெல்வது வழக்கமாகி வரும் நிலையில், அதனை சாலைகளில் வீசுவது, வீட்டு மொட்டை மாடிகளில், தெருக்களில் வீசுவதால் அவற்றை விஷம் என்று அறியாமலேயே உண்டு சிட்டு குருவிகள் பரிதாப உயிரிழப்பை சந்திக்கின்றன. கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் இப்படி சூயிங்கத்தை சாப்பிட்டு ஆயிரக்கணக்கில் சிட்டுக்குருவிகள் உயிரிழந்துள்ளன.
இனிமேலாவது சூயிங்கத்தை மென்று விட்டு வீசுவதற்கு முன் ஒரு வினாடி யோசியுங்கள்… சிட்டுக்குருவிகளை சிறகடிக்க அனுமதியுங்கள்!
They can be safe guarded in our terrace. But where to get the shelter box?
Dear Sir,
I came across this in net.
http://www.shopping.natureforever.org/Products/Nature-Nestboxes/NF/Sparrow-and-Tit-Nestbox/pid-624184.aspx
It costs around Rs300. Sparrows easily adopt to urban and house settings and they should love this..
– admin