கடலில் வாழும் அற்புத பிராணிகளான ஆமைகள் கடல் குதிரைகள் எப்படி மனிதனால் அழிக்க படுகின்றன என படித்தோம்.
இந்த சூழலில் சிலர் தன்னால் முடிந்த அளவு கடல் ஆமைகளை காப்பாற்றி கடலில் விடுவதை volunteer வேலையாக செய்கின்றனர். இந்த ஒலிவ் ரிட்லி போன்ற பெரிய கடல் ஆமைகள் மிகவும் சாதுவானவை. இவை கடலில் உள்ள மீனவர்களின் (Trawlers ) போன்ற இயந்திரங்களில் மாட்டி சாகின்றன. மீனவர்கள் அடிபட்ட இந்த ஆமைகளை அப்படியே கடலில் விட்டு விட்டு தனக்கு வேண்டிய மீன்களை மட்டும் எடுத்து கொள்கின்றனர். வீணாக இந்த சாதுவான ஆமைகள் மடிகின்றன.
மேலும் இந்த ஆமைகள் சென்னையில் இருந்து மரக்காணம் வரை உள்ள கடல்கரையில் ஜனவரி பெப்ரவரி மாதங்களில் வந்து முட்டை இடும். 1000 முட்டைகளில் 1 மட்டுமே வளர்ந்து பெரிய ஆமையாகும். கடல் கரையில் உள்ள காக்கா, நாய்கள் இந்த முட்டைகளை தின்று விடும்.
சென்னையில் உள்ள tree பௌண்டடின் (Tree Foundation) என்ற அமைப்பு 12 வருடங்களாக பொது மக்கள் மற்றும் மீனவர்கள் உதவியோடு அடிப்பட்ட ஆமைகளை காப்பாற்றியும் முட்டைகளை பாதுகாத்தும் வருகின்றனர்.
இந்த அமைப்பை பற்றிய ஒரு வீடியோ தினத்தந்தி டிவி இருந்து…