சங்ககால இலக்கியத்தில் கூறியுள்ளதை பயன்படுத்தி, பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில், யானைகள் நடமாட்டத்தை குறைக்க முடியும்’ என, வேளாண் துறையினர் கூறத் துவங்கியுள்ளனர்.இதுகுறித்து வேளாண்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
- யானைகளுக்கு தேனீக்களை கண்டாலே பிடிக்காது.
- இதேபோல, அவரை செடியில் இருந்து வரும் ஒருவித வாசமும் பிடிக்காது; அவரை செடியில் இருக்கும் பூச்சிகள் எழுப்பும் சப்தமும் பிடிக்காது. எனவே, தேனீக்கள் மற்றும் அவரை செடிகள் இருக்கும் இடங்களில், யானைகள் நடமாட்டம் இருக்காது.
சங்ககால இலக்கியங்களில், இதுபற்றி கூறப்பட்டுள்ளது.

யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில், செயற்கை முறையில், தேனீ வளர்ப்பு மற்றும் அவரைச் செடிகள் வளர்ப்பை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆலோசனை கூறுகின்றனர். அவ்வாறு செய்தால், வரும் காலங்களில்,விவசாயிகளுக்கு வருவாய் கிடைப்பதுடன், யானைகளால் ஏற்படும் தேவையற்ற பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என்கின்றனர். அதேநேரத்தில், யானைகள் நடமாட்டம் உள்ள மாவட்டங்களில், அவரைச்செடி வளர்ப்பை ஊக்குவிக்க அரசும் நடவடிக்கை எடுத்தால் சிறப்பாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி: தினமலர்