டைகுளோபெனாக்கும் பிணந்தின்னி கழுகுகளும்

பிணந்தின்னிக் கழுகுகள் (Vultures) சுற்று சூழலில் ஒரு முக்கிய பணி ஆற்றுகின்றன.
இறந்து கிடக்கும் ஆடு மாடு ஆகியவற்றின் பிணங்களை இவை தின்று இவற்றின் மூலம் நோய்கள் பரவாது இருக்க உதவு கின்றன.
220px-Indian_vulture_on_cliff
இந்த கழுகுகளின் ஒரு சிறப்பம்சம் என்ன என்றால், இவை, பிணங்களில் உள்ள எந்த கிருமிகள், வைரஸ்கள் இந்த பறவைகளை ஒன்றும் செய்வதில்லை என்பதே!

ஆனால், 1990 வருடம் பின்பு, இந்த பறவைகளின் எண்ணிக்கை 97% வரை குறைந்து விட்டது!
இதன் காரணம் என்ன என்று வெகு நாட்கள் வரை யாருக்கும் தெரிய வில்லை.
2003 வருடம், Dr. Lindsay Oaks என்பவர் டைகுளோபெனாக் (diclofenac) என்ற மருந்து மூலம் தான், இந்த பறவைகள் இறந்து விட்டன என்று கண்டு பிடித்தார்.
இந்த மருந்து, மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் கொடுக்க படுகின்ற ஒரு மருந்து. ஆனால், இவை இந்த கழுகளுக்கு எமனாக ஆகி விட்டது. இந்த மருந்தை கால்நடை மருத்துவர்கள் கொடுத்தால், இவை, இறந்த உடல்களில் இருக்கின்றன. இவற்றை தின்ற கழுகுகள் இறக்கின்றன.

இந்திய அரசு, இப்போது கால்நடைகளுக்கு இந்த மருந்தை தடை செய்து மேலோசிகாம் (meloxicam ) என்ற மருந்தை சிபாரிசு செய்து உள்ளது.

10 வருடங்களில், மனிதனின் ஒரு செயலால், ஒரு பறவை இனம் 97% அழிக்க முடியும் என்று தெரிகிறது! இந்த பறவைகள் இப்போது மிக மெதுவாக பிழைத்த கொண்டு வருகின்றன

நன்றி: விக்கிபீடியா

Related Posts

கோடியக்கரை: விருந்தாளிப் பறவைகளின் உல்லாச விடுதி... ஆண்டுதோறும் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் பூமியின் வடக்குப் பகுதியில் கடும் குள...
தமிழகத்திற்கு தேவை மயில் சரணாலயங்கள்... முருக பெருமானுக்கு வாகனமும் தமிழகத்தில் பல மலைகளில் காணப்படும் தமிழக மக்களின் அன...
தெரிந்து கொள்வோம் – தண்ணீர் காக்கா... இரண்டு சிறகுகளையும் நன்றாக விரித்து வைத்துக்கொண்டு கரையோர மரங்களில் நீர்க்காகங்க...
பிழைக்குமா கானமயில்?... கானமயிலாட கண்டிருந்த வான்கோழி என்ற பாடலைக் கேள்விப்பட்டிப்பீர்கள். அதில் வரும் க...

2 thoughts on “டைகுளோபெனாக்கும் பிணந்தின்னி கழுகுகளும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *