வறட்சி இந்த விவசாயியிடம் ஏன் தோற்றது தெரியுமா?!


டந்த 10 ஆண்டுகளில் அதிகளவில் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்ட  பண்டல்கண்ட் (bundelkhand) பச்சைப் பசேலென உள்ளது பிரேம் சிங்கின் வயல்வெளி. உலகமெங்கும் முக்கியமாக சில மாநிலங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டிருக்கும் சமயத்தில் கூட, அவரது வயலில் புழுக்கள், தவளை போன்ற பல்லுயிரினங்களும், தேவையான அளவு தண்ணீரும் உள்ளது. மேலும், அவரது வயலில் பழம் தருகின்ற மரங்கள், கால்நடைகள் ஆகியவை உள்ளன.


இவர் இயற்கை விவசாயத்தையும், பண்டைய கால முறையில் பின்பற்றபட்ட பயிர் சுழற்சி முறையையும் செய்து வருகிறார்.  இம்முறையை பின்பற்றுவதால் நாட்டில் எங்கு பஞ்சம் வந்தாலோ, இவரது வயல் மட்டும் பசுமையுடன் இருக்கிறது. இவரது வயல் மூன்றாகப் பிரிக்கப்பட்டு, ஒன்றில் பழமரங்கள், மற்றொன்றில் கால்நடை வளர்ப்பு. மீதமுள்ளதில் விவசாயம் என பிரித்து செய்து வருகிறார்.
மேலும், இவர் ஜோஹன் டி ஹல்ஸ்டர் (Johan D’hulster) எனும் பெல்ஜியம் எழுத்தாளரோடு இணைந்து, நீடித்து நிலைக்கும் (sustainable farming) விவசாயம் பற்றிய புத்தகம் வெளியிட்டுள்ளார். 52 வயதான இவர் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் தத்துவவியல் படித்து விட்டு, பசுமைப் புரட்சியின் தீமைகளைக் எதிர்த்து இயற்கை விவசாயித்திற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். “பசுமைப் புரட்சி நமது பழமையான விவசாய முறையை அழித்து விட்டது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்” என்கிறார்.

இதுவரை பண்டல்கண்ட் 17 வறட்சியைச் சந்தித்துள்ளது. அதில் 10 வறட்சி, போதிய மழை இல்லாததால் ஏற்பட்டது. கடந்த 30 வருடத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் மட்டுமே, பாரம்பர்ய விவசாயத்தை அடியோடு அழித்து விட்டது. எனினும் இத்தனை வறட்சியை தாண்டியும் இவரது வயல்வெளி மட்டும் பசுமை போர்வையுடன் இருக்கிறது.

நன்றி: ஆனந்த விகடன்

[embedit snippet=”whatsapp”]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *